பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1833 தம்பிரான் தோழர் என்று காட்டுவார். தம்பிரான்தோழரின் பரிசனங்கள் பரவையாரின் மாளிகையினுள் புகுதப்பெறாது மீண்டு சுந்தரர் தங்கியிருக்கும் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து, அவரை இறைஞ்சி நின்று, "பெரியீர், தாங்கள் திருவொற்றி யூரில் சங்கிலியாரை மணந்த செய்தி முழுவதையும் பரவையார் முன்னமே கேள்வியுற்றுச் சினங்கொண்டிருந்தமை யால், இப்பொழுது நாங்கள் பரவையாரின் திரும்ாளிகைப் புறத்திலும் அணுகவொண்ணாதபடித்தடுக்கப்பெற்றோம்:ஆதலால் திரும்பி விட்டோம் என்று தெரிவிக்கின்றனர். மங்கையர் தம் கணவன்மார் பிற மாதர்களிடம் பேசவும் பொறார். ஊடல் அவர்தம் குருதியிலேயே உற்பத்தியாகும். ஒர் அற்புத உணர்ச்சி. வள்ளுவப் பெருமான் இந்த மெல்லிய நுட்பமான உணச்சியை அற்புதமாகக் காட்டுவார். அதனைச் சிறிது அறிந்துகொண்டால் பரவையாரின் ஊடலை நன்கு அது பவித்து மகிழலாம். திருவள்ளுவர் படைத்துக் காட்டும் காதலர்களிடையே ஊடல் எழுகின்றது. காதலி ஊடுகின் றாள்: இது விளையாட்டான ஊடல்தான்; கற்பனை ஊடல். காதலன் தவறு செய்ததாகக் கற்பனை செய்து கொண்டு ஊடுகின்றாள் காதலி. - > * காதலி காதலனை நோக்கி, "எல்லாப் பெண்களும் கண்ணால் உன்னைக் கண்டு உன் அழகைப் பருகுகின்றார் கள். ஆதலால் நீ கற்பு இல்லாதவன். உன்னை நான் அணுக வொட்டேன்' என்கின்றாள். பெண்ணியலார் எல்லோரும் கண்ணில் பொதுஉண்பர் நண்ணேன் பரத்து! நின் மார்பு." - இஃது ஒருவகை ஊடல், காதலன் ஒரு மாலையைச் சூடிச் செல்லுகின்றான். அது வேற்று நிலத்துக் கோட்டுப் பூக்களால் 3. குறள் - 1813