பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரத்வயாரின் ஊடல் தீர்த்தல் 103. ஆனது. அதைக் காதலி கண்ணுற்றதும் அவள்பால் ஊடல் எழுகின்றது. 'உன் காதலி யாரோ ஒருத்திக்கு இந்த அழகைக் காட்ட வேண்டும் என்றுதான் சூடிக்கொண் டுள்ளாய்” என்று ஊடுகின்றாள். கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினிர் என்று." ஒரு நாள் காதலன் ஒருவன் அன்பு மிகுதியால் 'காதலர் யாவரையும் விட நாம் காதல் மிகுந்தவர்களாக உள்ளோம்’ என்று சாதாரணமாகத்தான் சொல்லுகின்றான். காதலி உடனே ஊடல் கொண்டு “நீ பல மகளிரைக் காதவிக் கின்றனையோ? அவருள் என்னிடம் அன்பு மிகுதியோ? என்னைப் போன்ற காதலர் பலர் உளரோ? அதனால்தான் பாவரையும் விடக் காதல் மிகுதி என்றாயோ? அவர்கள் யாவர்? யாரைவிட? யாரைவி..?’ என்று கேட்கின்றாள். யாரினும் காதலம் என்றேனா; ஊடினாள் யாரினும் யாரினும் என்று." - இன்னொரு காதலன் தன் காதலியை நோக்கி, இந்தப் பிறப்பில் நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டோம்” என்கின்றான்.உடனே காதலி. அப்படியா? இந்த ஒரு பிறப்பு தானா? மறுபிறப்பில் பிரியக் கருதிவிட்டாயா?’ என்று ஊடிக் கொண்டே கண்ணிர் உகுக்கின்றாள்; மனம் ஒடிந்து போகின்றாள். - இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள்." பிறிதொரு காதலன் சும்மா இராமல், நின்னைவிட்டுப் பிரிந்து சென்றிருந்தபோது அடிக்கடி உன்னை நினைந்தேன்’ 4. குறள் 131.3 5. குறள் - 1314 6. കേു. 1315