பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

İğ5 தம்பிரான் தோழர், என்று சொல்லி வைக்கின்றான். உடனே காதலி, "பிரிந்த, வுடன் என்னை மறந்தனையோ? மறந்ததனால்தானே ஆடும் நினைக்க நேர்ந்தது? என்னை மறந்தே விட்டாய்” என்று சொல்லிய வண்ணம் முகத்தைத் திருப்பிக் கொள்ளு கின்றாள். உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கள்ை." - மற்றொரு காதல் இணையிடம் ஊடல் நீடிக்கின்றது. காதலனுக்குத் தும்மல் வருகின்றது, தும்முகின்றான். வழக்கம் போல் காதவி நூறாண்டு வாழ்க’ என்று தும்மல் கேட்டு வாழ்த்துகின்றாள். ஆனால் இவ்வாறு தன் வாயால் வாழ்த்துப் பெறவேண்டும் என்றும், ஊடலை முடிக்க வேண்டும் என்றும் வேண்டுமென்றே காதலன் செயற்கை யாகத் தும்மியதாக எண்ணுகின்றாள். ஊடல் முடிவதுபோய் மிகுதியாகின்றது. அடுத்த நொடியில் அவள் மனத்தில் வேறோர் எண்ணம் உதிக்கின்றது. "யாராவது நினைத்தால் தான் ஒருவர்க்குத் தும்மல் வரும் என்பது நியதி. இப்போது இவரை யார் நினைத்திருப்பார்கள்? நினைக்கும் உரிமை உடையவள் நான் ஒருத்திதானே! இப்படி நினைத்தது தவறா? இன்னும் யாரோ ஒருத்தி இவருக்குக் காதலியாக இருக்கவேண்டும். அவள் நினைத்ததால்தான் இவருக்குத் தும்மல் வந்தது" என்று எண்ணுகின்றாள். காதலனை நோக்கி 'யார் நினைக்கத் தும்மல் வந்தது" என்று கேட்டே விடுகின்றாள், ஊடவும் செய்கின்றாள். இதனை உணர்ந்தே காதலன் அடுத்த தும்மலை வெளிப் படுத்தாமல் அடக்கிவிட முயல்கின்றான். இதை யறிந்த காதலி, தெரிந்து விட்டது; என் அப்பன் குதிருக்குள்