பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவையாரின் ஊடல் தீர்த்தல் 107 இல்லை என்பதுபோல் உன் காதலி நினைக்கின்றான் என்பது எனக்குப் புலப்படாதபடி மறைக்கின்றாய்;அதனால் ă - * *... ; or * 3. தான் தும்மலை அடக்குகின்றாய்' என்று சொல்லி அழத் தொடங்குகின்றாள். ஊடி இருந்தேமாத் தும்மினார் யார் தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து." வழுத்தினாள் தும்மி னேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று." தும்முச் செறுப்ப அழுதாள் நூமர் உள்ளல் எம்மை மறைத்தீரோ என்று." இங்ஙனம் நுட்பமான ஊடல் உண்ர்வைத் தம் கற்பனைக் காதலர்கள்பால் இருப்பதைக் காட்டுகின்றார் வள்ளுவத் பெருமான். - திருவள்ளுவர் படைத்துக் காட்டும் காதல் இனைகள் பல நுட்பமான ஊடல் உணர்வைக் காட்டக் கவிஞர் பெரு மான் இந்த உத்தியைக் கையாளுகின்றார். ஆனால் தம்பிரான் தோழர் வாழ்க்கை உண்மையானது; உண்மை யாகவே சங்கிலியாரை இரண்டாம் மனைவியாக்கிக் கொள்கின்றார். வெறும் வாயை மெல்லுவோர்க்கு அவல் கிடைத்தால் சொல்லவா வேண்டும்? பரிசனங்களால் பரவையார் கொண்டுள்ள வெகுளியின் உறைப்பை அறிந்த நம்பியாரூரர் மிகவும் கலக்கமடை கின்றார். இனி இதற்கு என் செய்வோம்? என்று நெடிது நினைக்கின்றார். உலகியல் நடைமுறைகளை நன்குணர்ந்த சில பெரியோர்களைத் தம்பால் பரவையார் கொண்டுள்ள வெகுளியைத் தணித்து வரும்படி அனுப்புகின்றார். அவர் 8. குறள்-1312 9. ධාඤ-1317 10, டிெ-1319