பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#08 தம்பிரான் தோழர் களும் பரவையார் மாளிகையை யடைந்து அம்பெருமாட்டி மனங் கொள்ளத்தக்க வகையில் வேண்டும் பல நியாயங் களை எடுத்துரைக்கின்றனர்; நீவிர் நம்பியாரூரருடன் முன் போல் கூடியிருத்தல் வேண்டும் என வேண்டுகின்றனர். அமைதி கூற வந்த அறிஞர்களை நோக்கி, "ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்புதிரேல், என்னுயிரைத் துறப்பேன்’ என வருந்திக் கூறுகின்றார். அம்மொழி கேட்டு அவர்தம் மனநிலையை நன்கறிந்து அச்சமுற்ற அறிஞர்கள் நாவலுராரின்பால் திரும்பி நிகழ்ந்ததைத் தெரிவித்து அமை கின்றனர். · தூது சென்ற பெரியோர்களின் மறுமொ ழியைக் கேட்ட தம்பிரான் தோழர் மிகவும் வருத்துகின்றார். இந்த துயர்க் கடவினை நீந்திச் செல்வதற்கான புணையைக் காண முடியாமல் மிகவும் வேதனைப் படுகின்றார். பேய்களும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவில் தம் தோழராகிய வீதி விடங்கப் பெருமான் திருவடிகளை நினைந்து, போற்றி, "என்னை அடிமை கொண்ட பெருமானே, முன்னை வினையால் இத்துன்பத்திற்குக் காரணமாக இருப்பவள் பரவையார்; அவள்பால் நீரே இந்த இரவு நேரத்தில் சென்று அச்சீமாட்டி என்பால் கொண்ட ஊடலைத் தணித் தருள்வீராயின் தான் உயிர்தாங்கியிருத்தல் கூடும். இதுவன்றி என்னாற் செய்யத்தக்கது ஒன்றும் இல்லை’ என்று வேண்டு கின்றார். - - இந்நிலையில் அடியார்களின் துன்பத்தினைக் 57653 பொறாத அருளாளராகிய சிவபெருமான்,நெடியோனும் அறி. யாத திரு அடிமலர்கள் நிலத்தில் தோய எழுந்தருளித் தம் நம்பியாகுரரை அடைஇன்றார். அடைந்தவர் உற்ற துயரம் யாது?’ என வினவுகின்றார். அருளே 4. பெ.பு: ஏயர்கோன்-323