பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவையாரின் ஊடல் தீர்த்தல் 109 திருமேனியாகக் கொண்டு எளிவந்தருளிய இறைவனைக் காணப்பெற்ற தம்பிரான் தோழர், விரைந்தெழுந்து சென்று: அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்றார். வணங்கியவர், 'பெருமானே, நுமது திருவருளால் அடியேன் திருவொற்றி யூரிலே சங்கிலியைத் திருக்கரம் பற்றிய செய்தி முழுவதை யும் பரவையார் கேள்வியுற்றுத் தன்பால் யான் அடைந்தால் தன் உயிரையே விட்டு விடுவதென்னும் துணிவு கொண் டுள்ளாள். சிறியேன் உமக்கு அடியவனும் தேவரீர் ஆண்ட வனுமாக இருப்பது உண்மையானால், அறிவிழத்து வருந்தும் சிறியேனது அயர்வும் துயரமும் நீங்க இவ்விரவே பரவையின் பொருட்டு அவள் மாளிகைக்குத் துரது சென்று அவளது ஊடலைத் தீர்த்தருளுதல் வேண்டும்’ எனக் குறை இரந்து வேண்டுகின்றார். , அடியார்களது அன்பினை வேண்டும் இறைவன் வன் றொண்டரது துன்பத்தை நீக்கத் திருவுள்ளங் கொள்ளு கின்றார். தம் தோழராகிய அவரை நோக்கி, நீ வருந்தற்க: யான் நின்னுடைய தாதனாகி இப்பொழுதே பரவை வீட்டிற்குச் செல்கின்றோம்” எனத் திருவாய் மலர்ந்தருளித் தேவர் முதலியோர் புடைசூழ்ந்து வரப் பரவையாரின் திரு மாளிகையை நோக்கி வருகின்றார். வந்தவர் உடன்வந்த சிவகணங்கள் அனைவரும் புறத்தே நிற்க, தாம் மட்டிலும் தமக்குத் திருக்கோயிலில் வழிபாடு செய்யும் மறை முனிவர் வடிவுடன் தனித்து உள்ளே சென்று பரவையே, திருக்கடைக் காப்பினை நீக்குக' எனக் கதவினைத் தட்டி அழைக்கின்றார். பூங்கோயிலமர்ந்த பெருமானுக்குப் பூசனை. புரியும் மறையவரே இவ்வாறு அழைப்பதாக எண்ணிய பரவையார், "இப்பெரியவர் நள்ளிரவிலே இங்கு வந்தது எக் காரணம் பற்றியோ?' என ஐயுற்று நடுக்கம் எய்துகின்றார்; ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு கதவினைத் திறக்கின்றார். மறையவரை நோக்கி, செந்தண்மை பூண்ட