பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#1() தம்பிரான் தோழர் அந்தனரே, நீவிர் எம்மையாளும் சிவபெருமானைப் போன்று இங்கு எழுந்தருளியதன் காரணம் யாது?’ என வினவு கின்றார். இதனைக் கேட்ட மறையவ்ரும், நங்கையே. நான் சொல்வதை நீ மறுக்காமல் செய்வாயாயின், சொல்லுவேன்’ என்கின்றார். பரவையாரும், "நீவிர் சொல்லக் கருதிய தனைச் சொல்வீராக; என்னால் செய்யத் தக்கதாயின் செய் வேன்' என்கின்றார். 'நம்பியாரூர் இங்குப் போதற்கு நீ இசைந்தருளுதல் வேண்டும்' என்று மறையவர் பணித்தருள அது கேட்ட பரவையார் “நன்று, நன்று. பங்குனித் திரு நாளுக்குப் பொன் முதலியன கொண்டு பண்டுபோல் வருட வராக இங்கு என்னைப் பிரிந்து சென்றார்: சென்றவர் திரு வொற்றியூரெய்தி அங்கே சங்கிலியார்பால் பிணிப்புண்டார்; இத்தகையவருக்கு இங்கு எப்படிச் சார்புண்டாகும்? அவர் பொருட்டு நள்ளிரவில் தாங்கள் இங்கு வந்து சொன்ன காரியம் மிகவும் நன்றாயுள்ளது!’ என்று மறுத்துரைக் கின்றார். இது கேட்ட மறையவர், நங்காய், நீ நம்பியாரூரன் செய்த குற்றத்தினை உள்ளத்திற் கொள்ளாது வெகுளி நீங்கி அவனை அன்புடன் வரவேற்கும் பொருட்டன்றோ யான் உன்னை வேண்டிக் கொண்டது. இதனை மறுத்துரைப் பது முறையாகாது' என்று மறையவர் வற்புறுத்திக் கூறு கின்றார். அவர் கூறியதைக் கேட்ட பரவையார். ‘அருமறை முனிவராகி நீர் பொருத்தமற்ற இக்காரியத்தின் பொருட்டு தள்ளிரவில் ஈண்டு வருதல் நுமது பெருமைக்கு ஏற்றதன்று, ஒற்றியூரில் நிலைத்த உள்ளமுடைய அவர் இவண் போதரு வதற்கு ஒரு சிறிதும் இசையேன்.நீர் விரைவில் இவ்விடத்தை விட்டு அகல்வீராக’’ எனச் சினந் தோன்றக் கூறுகின்றார்." இந்நிலையில் மறைவராக வந்த இறைவன் தம்முளே 12. பெ.பு: ஏயர்கோன்-342,345,