பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳፬6 தம்பிரான் தோழர் பரவையாரின் பணிந்த மொழியைக் கேட்டு மகிழ்ந்த மங்கையோர் பாகம் வைத்த வள்ளல் பெருமான், நங்கையே, நீ நின்பெருந்தன்மைக் கேற்ப நன்றே மொழிந்தனை எனக் கூறி நம்பியாரூரர்பால் நண்ணுகின்றார். தம்பிரான் தோழரும் சிவபெருமானை எதிர்கொண்டு போற்றி, எம் பெருமானே, என் உயிரைக் காவாது இடர் செய்யும் பரவை விடத்திலிருந்து எத்தகைய மறுமொழியைக் கொண்டு வத்தி எனக் கேட்கின்றார். இறைவனும் தம் தோழனை நோக்கி, நின்மீது பரவை கொண்டிருந்த வெகுளியைத் தணிவித்து வந்தோம். இனி நீ அவளிடத்தில் செல்லலாம்" என்று மறுமொழி கூறுகின்றார். இறைவனது அருளுரை வினைக் கேட்டு மகிழ்கின்றார் தம்பிரான் தோழர். 'எந்தை பிரானே, பந்தமும் வீடும் என்ற இருமை இன்பத்தினையும் அடியேற்கு வழங்கியருளினீர். இனி எளியேனுக்கு இடர் ஒன்றும் இல்லை' என்று கூறி இறைவன் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சுகின்றார். தொண்டர்களின் துயர் தீர்த் தகுள் புரியும் வீதிவிடங்க்ப் பெருமான் எவ்வுயிரும் களிகூர விடைமீதெழுந்தருளித் திருவாரூர்ப் பூங்கோயிலிற் சென்று ஆத்து அமர்கின்றார். தம்பிரான் தோழர் தம் பரிசனங்கள் சூழ்ந்து போற்றி உடன் ஏக, பரவையார் மாளிகை சேர்வதைச் சேக்கிழார் பெருமான், மூன்துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப மின்திகழ் பொலம்பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த மன்றல்செய் மதுர சீர கேரங் கொண்டு மந்த த் தேன்றலும் எதிர்கொண் டெய்தும் சேவகம் முன்பு காட்ட