பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவையாரின் ஊடல் தீர்த்தல் - . 117 மாலைதண் கலவைச் சேறு மான் மதச் சாந்து பொங்கும் கோலநற் பசுங்கர்ப் பூரம் குங்குமம் முதலா புள்ள சாலுமெய்க் கலன்கள் கூடச் சாந்தும் பூண் ஆடை வர்க்கம் பாலன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல, ' என்று காட்டுவார். பரவையார் இவரை எதிர்நின்று வர வேற்றதைகம், இவ்வகை இவர் வந் தெய்த எய்திய விருப்பி னோடும் மைவளர் நெடுங்கண் ணாரும் மாளிகை அடைய மன்னும் செய்வினை அலங்கா ரத்துச் சிறப்பணி பலவும் செய்து நெய்வளர் விளக்குத் துரபம் நிறைகுடம் நிரைத்துப் பின்னும் பூமவி நறும்பொற் றாமம் புனைமணிக் கோவை நாற்றிக் காமற்பொற் சுண்ணம் வீசிக் கமழ்நறுஞ் சாந்து நீவித் துரமலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத் தாமும் மாமணி வாயில் முன்பு வந்தெதிர் ஏற்று நின்றார்.” என்று புலப்படுத்துவார். 19. பெ. பு: ஏயர்கோன்-376, 377 20. டிெ டிெ. 378, 379.