பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2: தம்பிரான் தோழர் தீர்த்தற்குரியன்? இந்நோய் அவனால் தீர்க்கப் படுதலை விடத் இராமல் நின்று என்னை வருத்துதலே நன்றாகும் நீவீர் அவ்வன்றொண்டனுக்கேற்ற உறுதியையே செய்தீர்' " என்று மறுமாற்றம் தருகின்றார். இந்நிலையில் கற்றைவார் சடை வார்தாமும் மறைந்தருளுகின்றார்." இந்திலையில் கங்கைவார் சடையார் வன்றொண்டரை அனுகுகின்றார். "நீர் நம் ஏவலால் ஏயர்கோன் கவிக்காமரை யடைந்து அவனை வருத்துகின்ற சூலை நோயினைத் தீர்ப்பாயாக’ எனப் பணித்தருளுகின்றார். இந்த அருளுரையைக் கேட்டு மகிழ்கின்றார் நாவலூரர்; தாம் சூலை நோயைத் தீர்க்க வரும் செய்தியை முன்னமே கவிக்காமருக்குத் தெரிவிக்கும்படி ஆள் அனுப்புகின்றார், வன்றொண்டர் தம்மை நோக்கிச் சூலை நோயைத் தீர்க்கும் எண்ணத்துடன் வருகின்றrர் என்பதை உணர்ந்த கலிக்காமர் "இறைவனைத் தூதனாக ஏவல் கொண்ட கொடியன் வன்றொண்டன் எனது நோய் தீர்க்க இங்கு வந்தால் யான் செய்வது என்னாகும்? அவன் போதருவதற்கு முன்னே என்னை வருத்தும் சூலைநோயினை வயிற்றொடும் கிழித்துப் போக்குவேன்' எனத் துணிந்து உடை வாளினால் தம் வயிற்றை கிழித்துக் கொண்டு உயிரைப் போக்கிச் சூலை நோயையும் தீர்த்துக் கொள்ளுகின்றார். இத்துன்ப நிகழ்ச்சியைப் பொறுக்க லாற்றாது மனம் துளங்கிய கலிக்காமரின் தேவியார் தம் கணவரது பிரிவுக் காற்றாது உயிர்விடத் துணிகின்றார். இந்தச் சமயத்தில் "நம்பியாரூரர் இங்கு எழுந்தருளினார்’ என்று சிலர் விரைந்து வந்து செப்புகின்றனர். இதனைக் கேட்ட அம்மையார் 'ஒருவரும் அழக்கூடாது' என இல்லத் துள்ளாருக்குப் பணிக்கின்றனர்; தம் கணவர் உயிர் துறந்த 5. டிெ. டிெ 389 - 393.