பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏயர்கோன் கலிக்காமருடன் நட்பு - ### அரிவைகாரணத்தி னாலே ஆளுடைப் பரமர் தம்மை இரவினில் துரது போக ஏவி அங் கிருந்தான் தன்னை வரவெதிர் காண்டே னாகில் வருவதென் னாங்கொல்: என்று சொல்லி உள்ளம் வெதும்பி மிகவும் சினம்கொண்டு இருக்கின்றார். - சிவனடியாராகிய ஏயர்கோன் கலிக்காமர் தம்மிடத்துச் சினம் கொண்டிருத்தலை அறிகின்றார் நம்பியாரூரர். தாம் செய்தது பெரும் பிழை என்றே உணர்கின்றார். கவிக்காமர் தம்மீது கொண்டிருக்கும் செற்றத்தைப் போக்கியருளும்படிச் சிவபெருமானைப்பலமுறையும் வேண்டுகின்றார். அன்பினால் அவ்விருவரையும் ஒற்றுமைப் படுத்தத் திருவுள்ளங் கொள்ளு கின்றார் அண்டர் நாயகன். கலிக்காயருக்குச் சூலை நோயை ஏவுகின்றார். அந்நோய் கலிக்காமரின் திருவயிற்றிற் புகுந்து பழுக்கக் காய்ச்சிய வேலைப்போன்று குடைந்து வருத்து கின்றது. அந்நோயின் கொடுமையைத் தாங்கமுடியாது தளர்ச்சியுற்று வாடும் கவிக்காமர், பூத நாயகனார்தம் பொற்றாள் பற்றியே போற்றுகின்றார்". அப்போது இறைவன் அவர் முன் தோன்றி, "உன்னை வருத்தும் சூலை நோய் வன்றொண்டன் வந்து தீர்த்தாலன்றித் தீராது" எனறு கூறியருள, கலிக்காமரும், "என் தந்தை, தந்தைக்குத் "தந்தை முதலாகவுள்ள எங்குல முன்னோர்க் கெல்லாம் தொழுகுலமாய் விளங்கும் முழுமுதற் கடவுள் நீரே என்னும் துணிவுடன் வழிமுறை வழிமுறையாக நும்மை வழிபட்டு வரும் குடியிற்பிறந்த எனது நோயினை நும்மால் வலிந்து ஆட்கொள்ளப் பெற்ற புதியவனாகிய வன்றொண்டனோ 4. பெ.பு ஏயர்கோன்-187 5. டிெ. டிே. 390