பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12.É. தம்பிரான் தோழர் சிவனடியார்களிடமும் ஆராக்காதல் கொண்டு அவர் பணி யையும் போற்றுபவர். ‘நிதியமாவன நீறுகந்தார் சுழல் என்று துதியினால் பரவித்தொழும் பேரன்பினர் என்பர் சேக்கிழார் பெருமான்". தம்மூருக்கருகிலுள்ள திருப்புன்கூர்’ என்ற தவத்தில் இவர் செய்த திருப்பணிகளில் மிகச் சிறந்தது பன்னிரண்டு வேலி நிலந்தந்து மழை பெய்வித்தது. பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டு (7.55:2) என்ற சுந்தரர் தேவாரத்தால் இதனை அறியலாம். இத் தடவை இத்தலத்திற்கு வந்தது மூன்றாம் முறையாகும். இப் பெரிய சிவத்தொண்டர் தம்பிரான் தோழர் தொண்டர் நாதனை ஏவல் கொண்ட செய்தியினைக் கேட்டு உணம் வெதும்ப வருந்துகின்றார். நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று! இதனைச் செய்வான் திருத் :தொண்டனாம்! இக்கொடுஞ் செய்தியைக் கேட்டிருந்தும் யான் உயிர் தாங்கியுள்ளேன். மங்கை பொருத்தியின் பிணக் கத்தைத் தீர்த்து அவளுடன் மருவி மகிழவேண்டும் என்னும் ஆசை காரணமாக ஒருவன் இறைவனையே துரதனுப்ப, ஒப்பற்ற கடவுள் அவனுக்குத் துரதனாகி ஒரிரவு முழுவதும் தம் திருவடித் தாமரைகள் நோவ அலைந்து திரிந்தாராம். ஒ:னோராலும் அறிய முடியாத இறைவன் அடியார் களிடத்துக் கொண்ட அருள் காரணமாகத் தூது செல்ல இசைத்தாராயினும் அடியான் ஒருவன் அவரை அங்ங்ணம் rதல் என்னமுதை? 2. பெ. பு. ஏயர்கோன்-7. - - - - - 3. புன்கூர் : 6-வது கட்டுரை, அடிக்குறிப்பு 6 காண்க.