பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. ஏயர்கோன் கலிக்காமருடன் நட்பு தம்பிரான் தோழர் தம் மனைவியாகிய பரவையாசின் ஊடல் தணித்தற் பொருட்டுத் தொண்டர் நாதனை நள்ளிரவில் இருமுறை தூது சென்று வரும்படி இருமுறை ஏவல் கொண்டார் என்ற செய்தி தமிழகமெங்கும் காட்டுத் தீ போல் பரவுகின்றது. இச்செய்தி ஏயர்கோன் கவிக்காமரின் செவிக்கு எட்டி விடுகின்றது. இந்தக் கலிக்காமர் யார்? சோழ நாட்டில் காவிரியின் வடகரைக்குக் கீழ்பால் திருப்பெருமங்கலம் என்ற பெரும்பதி ஒன்று உண்டு. செல்வச் சிறப்பு மிக்க அத் திருப்பதியைச் சேக்கிழார் பெருமான், - . - பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர் தான் பரவும் சீரின் மிக்கது. சிவபுரி . எனத் தகும் சிறப்பால்.’ என்று வருணித்திடுவர். இத்திருப்பதியில் ஏயர்கோன் குடி’ என்பது வளவர் சேனாபதிக் குடியாகும். வழிவழி வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டு வந்த தொன்மைக் குடியுமாகும். இந்த ஊரில் திருவருட் செல்வராகிய கவிக் காமர் தோன்றுகின்றார். இவர் கங்கைவாழ் முடியாராகிa: சிவபெருமானுக்கு வழிவழித தொண்டர் என்பதுடன் 1. பெ.பு: ஏயர்கோன்-4