பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 தம்பிரான் தோழர் கலிக்காமரது யிைற்றில் செருகப்பெற்றிருந்த குற்றுவாளைப் பற்றிக்கொண்டு அவ்வாளினாலேயே தம்உயிரைப் போக்கிக் கொள்ள முனைகின்றார். இந்நிலையில் ஏயர்கோன் சில பிரான் அருளால் உயிர் பெற்றெழுகின்றார். வன் தொண்டர் கையிற் பற்றிய வாளினைப் பறித்து அவர் செயலைத் தடுக்கின்றார். கலிக்காமர் உயிர் பெற்றெழுந் தம்ை கண்டு மகிழ்ந்த வன்றொண்டர் கலிக்காமரின் திருவடி அனில் வீழ்ந்து வணங்குகின்றார். கலிக்காமரும் தம் கையில் பற்றியிருந்த வாளினை நிலத்தில் எறிந்து விட்டுத் தம்பிரான் தோழரின் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சுகின்றார். இரு வரும் எழுந்து நின்று ஒருவரையொருவர் அன்பினால் அணைந்து கொண்டு கெழுதகை நண்பர்களாகின்றனர்; இறைவனது திருவருள் திறத்தை விரைந்து போற்று கின்றனர். - இதன்பின்னர் தம்பிரான் தோழர் கலிக்காமருடன் திருப்டின்களை அடைந்து இறைவனது திருக்கோயிலை வலம் வத்து வணங்கி 'அந்தணாள னுன்னடைக்கலம் புகுத’ (7.55) என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தினைப் பாடிப் பரவுகின்றார். தம் அன்புடைத் தோழராகிய ஏயர் கோன் கலிக்காம நாயனாரைப் பற்றிய சூலை நோயாகிய கடும்பிணியைத் தீர்த்தருளிய புன்கூர்ப் பெருமானின் திருவருட் செயலை, ஏத தன்னிலம் ஈரறுவேலி ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து (7.55:3) என்ற மூன்றாம் பாடலின் தொடரால் நம்பியாரூரர் குறிப் பிட்டுப் போற்றியுள்ளமை கண்டு மகிழத்தக்கது." 7. இதன் விவரம் சோழ நாட்டுத் க்தலப் பயணம் .இ) ஆதாம் நிலை) காண்க. திருத்த o ணம்’-இ