பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு. பாண்டிகாட்டுச் சிவத்தலங்கள் பதிநான்கு. அவை திருவாடானை, திருவாப்பனூர், திருவாலவாய் இராமேச் தரம், திருவேடகம்,கானப்பேர்.குறும்பலா (திருக்குற்றாலம்). கொடுங்குள் றம் (பிரான்மலை), திருச்சுழியல், திருநெல்வேலி திருப்பரங்குன்றம், திருப்பத்துரர், திருப்புனல் வாயில், பூவணம் என்பவையாகும். இவற்றுள் திருவாடானை, பிரான்மலை என்ற இரண்டுதலங்களைத் தம்பிரான் தோழர் அத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. திருப்புத்துார், திருவனப்பலூர், திருவாலவாய், இராமேச்சுரம்,திருவேடகம், திருநெல்வேலி, குறும்பலா ஆகிய ஏழும் சுந்தரரால் வழி படப்பெற்றாலும் திருப்பதிகங்கள் பெற்றனவாகத் தெரிய வில்லை. எஞ்சிய திருச்சுழியல், திருப்பரங்குன்றம் திருப் புனல் வாயில், திருப்பூவணம், கானப்பேர் என்ற ஐந்து மட்டிலும் பதிகங்களைப் பெற்றுள்ளன. ஈழநாட்டுத் திருத் தலம் ஒன்றைப் பாண்டி நாட்டிலிருந்தபடியே வழிபடு கின்றார் தம்பிரான் தோழர், சேர நாட்டை அக்காலத்தில் பெருமாக் கோதை உrராகிய சேரமான் பெருமாள் நாயனார் ஆண்டுவரு கின்றார். அவர் தில்லைச் சிற்றம்பலவனை நாடோறும் அருச்சனை செய்து வழிபாடு நடத்துபவர். பூசையின் முடிவில் அவர் இறைவனின் ஆடற்சிலம்பின் ஒலி கேட்பது வழக்கம். ஒரு நாள் இந்த ஒலி கேட்கவில்லை. இதனால் மதிமயங்கிய