பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12. சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(2) முதல் மூன்று நிலைகளில் சோழநாட்டுத் திருத்தலப் பயணத்தை முடித்துக் கொண்டு திருவாரூரில் பரவையா ருடன் வைகும் நாளில், தம்பிரான் தோழர் திருமுதுகுன்றப் பெருமானிடம் பெற்ற பொன்னை மணிமுத்தாற்று நீரில் விட்டுவந்தது நினைவிற்கு வருகின்றது. திருக்கோயிலின் மேற் பாலுள்ள திருக்குளத்தில் அதனை எடுக்க நினைக்கின்றார். பரவையாரை இவ்வற்புதக் காட்சியைக் காண வருமாறு அழைக்கின்றார். பரவையாரை நோக்கி, "நங்காய், திருமுதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்தருளிய பொன்னை மணிமுத்தாற்று நீரினுள் புகவிட்டு வந்தேன். அப்பொன்திரளை இறைவன் ருளால் திருவாரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள குளத்திலே தேடி எடுத்துவரப் போகிறேன். நீயும் என்னுடன் போதருக" என அழைக்கின்றார். இதனைக் கேட்ட பரவையார் சிறிது முறுவலித்து, “நாதா, இஃது என்ன அதிசயம்? ஆற்றிவிட்டதைக் குளத்தில் எடுப்பதாவது? என்று கூறுகின்றார். நம் பெருமான் அருளால் இகனைக் கேட்ட தம்பிரான் தோழர், “நன்னுதலாய், அப்பொன் முழுவதையும் குளத்திவே எடுத்து உனக்குத் தருவது பொய்யாது" என கூறுதி கூறுகின்றார்.