பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு வற்கென் றிருத்தி கண்டாய் மனமென்னொடு சூளறும்வைகலும் பொற்குன்றம் சேர்ந்த தோர் காக்கை பொன்னா மதுவேபுகல் கற்குன் றும்தூறும் கடுவெளி யும்கடற் கானவ்வாய்ப் புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே (4) 137 என்பது இச்செந்தமிழ் மாலையில் நான்காவது நறுமலர். பின்னர் சோழநாட்டை அடைகின்றார். பாம்பணிமா நகரி லுள்ள பாதானீச்சரம் (பதிகம் இல்லை) முதலாகப் பலதிருக் கோயில்களை வழிபட்டுச் சேரமான் பெருமாளுடன் திரு வாரூரை அடைந்து பரவையார் மாளிகையில் தங்குகின்றார் தம் தோழருடன், 17. பாதாச்சரம் (பாம்பணி) : மன்னார்குடியிலிருந்து 1}கல் தொவை.