பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

136 தம்பிரான் தோழர் பெருமாளுக்குத் (7.84) என்ற மாகக் கானப்பேர் தெரிவித்து "தொண்டாடித்தொழலும்" திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டு இருவரு வருகின்றனர். தொண்டரடித் தொழலும் சோதியிளம் பிறையும் சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும் புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள் பூசலிடக் கடல்நஞ் சுண்ட கருத்தமருங் கொண்ட வெனத்திகழும் கண்டமும் மென்தோளும் கோல நறுஞ்சடைமேல் வண்ணமும் கண்குளிரக் கண்டு தொழப்பெறுவ தென்றுகொலோ அடியேன் கார்வயல்சூழ் கானப் பேருறை காளையே.(1) என்பது திருப்பதிகத்தின் முதற் பாடல்.சில நாள் இத்திருத் தலத்தில் தங்கித் தம் தோழர் சேரவேந்தருடன் திருப்புன வாயிலுக்கு16 வருகின்றார். திருப்புனல் வாயில் இறைவனைச் "டுத்த நீதினை” (7.50) என்னும் திருப்பதிகம் பாடித் துதிக்கின்றார். 15. கானப்பேர்: இது காளையார் கோயில். நாட்டரசன் கோட்டையிலிருந்து 6கல் தொலைவு, தேவ கோட்டை செல்லும் வழியிலுள்ளளது. சுந்தரர் கனவில் காளையாகத் தோன்றித் தாம் இருப்பது 'கானப் பேர்' எனக் கூறி அவரை வணங்கச் செய்து பதிகம் பெற்ற படியால் 'காளையார் கோயில்' என்ற திருநாமம் பெறுகின்றது இத்தலம். 16. திருப்புனவாசல்: அறந்தாங்கியிலிருந்து 29 கல் தொலைவு. அறத் தாங்கியிலிருந்து 22 கல் தொலை விலுள்ள மீமிசல் போய் 7 கல் தொலைவு மாட்டு வண்டியில் சென்று இவ்வூரை அடையலாம். ஆடானை சென்று 12 கல் தொலைவு கடந்தாலும் இத்தவத்தை அடையலாம். இது கடற்கரைத்தலம். கருவறையிலுள்ள இலிங்கம் மிகப் பெரியது. ஆவுடையாரைச் சுற்றியுடுத்த 30 முழ நீளமுள்ள பரிவட்டம் தேவை. தஞ்சைப் பெரியகோயில் பிருஹதீசுவரர் நிளைவு வரும்.