பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு பத்தாகிய தொண்டர்தொழு பாலாவி யின்கரைமேல் செத்தார் எலும்பணிவான் திருகேதீச் சரத்தானே.(I) என்பது பதிகத்தின் முதற் பாடல். கிளம்பித் நிருச்சுழியல்14 என்ற 135 பின்னர் அங்கிருந்து தலத்தையடைத்து "ஊனாயுயிர்" (782) என்ற திருப்பதிகம் பாடி இறைவனை வழிபடுகின்றனர். ஊனாய் உயிர்புகலாய கலிடமாய் முகில்பொழியும் வானாய் வருமதியாய் விதிவருவான் இடம்பொழிலின் தேனா தரித்திசை வண்டினமிழற்றும் திருச்சுழியல் நானாவித நினைவார்தமை நலியார்நமன் தமரே. (1) என்பது பதிகத்தின் முதற்பாடல். இப்பதிகத்தால் வழிப்பட்டு அப்பதியில் தங்கியிருக்கும்போது, சிவபெருமான் தம் திருக் கையில் செண்டும் திருமுடியிற் சுழியமும் உடையராகி நம்பியூராருக்குக் கனவிலே தோன்றி 'யான் இருப்பது கானப் பேர்' என்று கூறி மறைந்தருளுகின்றார். சிவபெருமானிடம் என்றுமிலாத் திருக்கோலத்தைக் கண்டு விழித்தெழுந்த சேரமான் தோழர் தம் கனவுக் காட்சியைச் சேரமான் 14. திருக்சுழியல்: இத்தலம் மதுரையிலிருந்து 24 கல் தொலைவிலுள்ளது. மதுரையிலிருந்து அருப்புக் கோட்டை 17 கல் தொலைவு; அங்கிருந்து பேருந்து மூலம் 7கல். விருதுநகரிலிருந்து 19 கல்(அருப்புக் கோட்டைக்கு விருதுநகரிலிருந்து பேருந்து மூலம் 12 கல்; அங்கிருந்து பேருந்து மூலம் 7கல்.}