பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள் தம்பிரான் தோழர் அடியேனிட் டளங்கெடவே (7.25:1) என்ற முதல் பாடவையுடைய திருப்பதிகத்தினைப் பாடிப் போற்றுகின்றார். 'உம்பரும் வானவரும் உடன்நின்று காண அடியேனுக்குத் திருமுதுகுன்றத்தில் நீவிர் அளித்த செம் பொன்னை விரைவிற் பெறாது போன தளர்ச்சியினால் உண்டாகிய துன்பத்தைப் பரவையாகிய இவளதுமுன்னிலை யில் போக்கியருளுதல் வேண்டும்' என இறைஞ்சுவார். உம்பரும் வானவரும் உடனே நிற்க வேஎனக்குச் செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்றத்தமர்ந்தீர் வம்பமருங் குழலாள் பரவையிவள் வாடுகின்றாள் எம்பெருமான் அருளீர் அடியேன்இட் டளங்கெடவே (7.25.2) எனக் குறையிரந்து வேண்டுகின்றார். இங்ஙனம் இத்திருப் பதிகத்தின் எட்டாம் பாட்டளவும் வேண்டியும் முதுகுன்றத் திறைவன் பொன்னைத் தந்தருளவில்லை. ஏத்தா திருந்தறியேன் இமையோர் தனிநாயகனே மூத்தாயுலகுக் கெல்லாம் முதுகுன்றத் தமர்ந்தவனே பூத்தாருங் குழலாள் பரவையிவள் தன்முகப்பே கூத்தா தந்தருளாய் கொடியேன்இட் டளங்கெடவே (7.25:9)