பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழநாட்டுத் திருத்தல பயணம்-(2) 141 என்ற ஒன்பதாந் திருப்பாடலைப் பாடி முடிந்ததும் இறைவன் அருளால் பொன்திரள் திருக்குளத்தில் அகப்படுகின்றது. இந்தப் பொன்னையும் மாற்றறியக் கொணர்ந்த மச்சத்தை யும் உரைகல்லில் உரைத்து ஒப்புப் பார்த்தபொழுது குளத்தில் கிடைத்த பொன் மாற்றில் தாழ்ந்து காணப்படு கின்றது. அது கண்ட சுந்தரர் இறைவனை மீண்டும் மாலய யனுக்கரிய சழல் பாடிப் பரவுகின்றார். திருவருளால் பொன் மாற்றுயர்ந்து திகழ்கின்றது. பொற்குவையை ஏவலாளர் மூலம் பரவையாரின் திருமாளிகைக்கு அனுப்பிவிட்டுப் பரவையாருடன் மாளிகைக்குத் திரும்பி இறைவனின் திருவருட்டிறத்தைச் சிந்தித்த வண்ணம் மகிழ்ந்து உறை கின்றனர். இந்நிலையில் ஒருநாள் 'மணிப்புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப்' பாராட்டும் முறையில் "பாறுதாங்கி" (7.33) என்ற திருப்பதிகத்தைப் பாடி மகிழ்கின்றார். பாறு தாங்கிய காடரோ படுதலைய ரோமலைப் பாவையோர் கூறு தாங்கிய குழகரோ குழைக்காத ரோகுறுங் கோட்டிள ஏறு தாங்கிய கொடியரோ சுடுபொடி யரோவிளங் கும்பிறை ஆறு தாங்கிய சடைய ரோநமக் கடிகளாகிய அடிகளே. (1) என்பது இத்திருப்பதிகத்தின் சேக்கிழார் பெருமான், முதற்பாடல். இதனைச் பண்ணிறையும் வகை “பாறு தாங்கி"என எடுத்தருளி உண்ணிறையும் மனக்களிப்பால் உறுபுளகம் மயிர் முகிழ்ப்பக்