பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

142 தம்பிரான் தோழர் கண்ணிறையும் புனல்பொழியக் கரை இகந்த ஆனந்தம் எண்ணிறைந்த படிதோன்ற ஏந்திமகிழ்ந் தின்புற்றார்". என்று காட்டுவார். நான்காம் நிலை: ஒருநாள் இறைவன் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள ஏனைய திருத்தலங்களையும் வழிபட்டு மகிழத் திருவுள்ளங் கொள்ளுகின்றார். ஆரூரிறைவன்பால் விடைபெற்று முதலில் திருநள்ளாறு" என்ற திருத் தலத்தை அடைகின்றார். "செம்பொன் மேனி" (7.68) என்ற திருப்பதிகம்பாடி நள்ளாற்றிறைவனை ஏத்துகின்றார்: செம்பொன் மேனி வேண்ணீ றணிவானைக் கரியசுண்டனை மாலயன் காணாச் சம்புவைத் தழலங் கையி னானைச் சாமவேதனைத் தன்னொப்பி லானைக் கும்பமா கரியின் உரியானைக் கோவின் மேல்வருங் கோவினை எங்கள் நம்பனை நள்ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்னினைக் கேனே. (1) என்பது பதிகத்தின் முதற் பாடல். 2. பெ பு: ஏயர்கோன் - 141 3. நள்ளாறு (திருநளார்) பேரளம் - காரைக்கால் இருப் பூர்திப் பாதையில் ஒருநிலையம். நிலையத்திலிருந்து அரைக்கல் தொலைவிலுள்ளது திருக்கோயில். சப்த விடங்கங்களுள் இங்கு நகவிடங்கன்; உன் மத்த நடனம். மதுரையில் சம்பந்தர் அவல் வாதம் செய்த போது, தமது தேவார ஏடுகளில் ஒன்றை எடுத்து அனவில் இடும்போது இத்தலப் பதிகம் பச் சென்றிருந்த படியால் இப்பதிகம் (சம்பந்தர் 1.49.) ‘பச்சைப் பதிகம்' எனப்பெயர் பெற்றது. கோயிலின் வாயிலுக்கருகில் சனீஸ்வரன் கோயில் உள்ளது. 21 ஆண்டுக்கொரு முறைவரும் 'சனிப்பெயர்ச்சி’ உற்சவம் புகழ் பெற்றது சனிவன் தங்கக் காக்கை வாகனத்தில் எழுந்தருளுவார்.