பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழநாட்டுத் திருத்தல பயணம் -(2) 143 நள்ளா றிளின்று புறப்பட்டுக் கடவூர் வீரட்டத்திற்கு' வருகிறார் நம்பியாரூரர், "பொடியார் மேனி" (7.28) என்ற முதற்குறிப்பையுடைய திருப்பதிகம் பாடி இறைவனைப் போற்றுகின்றார். பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடும் கடியார் கொன்றையனே கடலூர்தனுள் வீரட்டத்தெம் அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயவதே. (I) என்பது திருப்பதிகத்தின் முதல் திருப்பாடல். கடலூர் வீரட்டத்தை விட்டுக் கடவூர் மயானத்திற்கு' வருகின்றார் தம்பிரான் தோழர். 'மறுவா கொன்றை’” 4. கடவூர் வீரட்டம் : மயிலாடுதுறை - தரங்கம்பாடி இருப்பூர்திப் பாதையில் திருக்கடையூர் நிலையத்தி லிருந்து கல் தொலைவிலுள்ளது. மார்க்கண் டனுக்கு என்றும் பதினாறு வயது எனும் சிரஞ்சீவிப் பேறளித்த அருந்தலம். அமிர்தக் கடலே சிவலிங்க மாயிருத்தலின் அமிர்த கடேசுவரர் என்பது இறைவன் திருநாமம். இறைவி அபிராமி, 'திருக் களிற்றுப் படியார்" என்ற சித்தாந்த சாத்திரத்தை இயற்றிய உய்யவந்த தேவநாயனார் அவதரித்த தலம். குங்குலியக் கல்ய நாயனாரும் காரி நாயனாரும் தொண்டு செய்து முத்தி பெற்ற தலம். அபிராமிபட்டர் அபிராமியந்தாதி பாடி அபிராமி அம்மையின் அருளால் அமாவாசையன்று முழு மதியை ஆகாயத்திற் காட்டிய அற்புத நிகழ்ச்சி தடைபெற்ற தலம். 5.கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்): திருக்கடைய யூரிலிருந்து 1} கல் தொலைவிலுள்ளது. பிரம தேவனை நிறாக்கிய மயானம்,