பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

144 தம்பிரான் தோழர் (7.33) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி மயானத் நிறைவனை வணங்கி மகிழ்கின்றனர். இத்திருப்பதிகத்தின் முதற் பாடல் இது. மருவார் கொள்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் கடலூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. (1) கடவூர் மயானத் திறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு வலம்புரம்' என்ற திருத்தலதிற்கு வருகின்றார் வன்றொண்டர், "எனக்கினி" (7.72) என்ற முதற்குறிப் பினையுடைய திருப்பதிகம் பாடி வலம்புரத்து எம்மானை ஏத்தித் துதிக்கின்றார். எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன் பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல் எனக்கினி யவன்றமர்க் கினியவன் எழுமையும் மனக்கினீ யவன்றன திடம்வலம் புரமே. (1) என்பது இத்திருப்பதிகத்தின் முதற் பாடல். 6. வலம்புரம் (பெரும்பள்ளம்) : சீகாழியிலிருந்து 8) கல் தொலைவிலுள்ளது.