பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(2) சாய்க்காட்டு 145 வலம்புரத்து இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு சாய்க்காடு' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் நம்பியாரூரர். எம்பெருமானை வணங்கியபின் (பதிகம் இல்லை) திருவெண்காட்டிற்கு வருகின்றார்" "படங்கொள் நாகம்" (7.6) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி வெண்காட்டிறைவனை வழிபடுகின்றார். கல் 7. சாய்க்காடு (சாயாவனம்). சீகாழியிலிருந்து 9 கல் தொலைவு.மயிலாடுதுறை - தரங்கம்பாடி இருப் பூர்தி வழியிலுள்ள ஆக்கூர் நிலையத்திலிருந்து Sகல், தொலைவு. திருவெண்காட்டிலிருந்து தொலைவு. பல்லவனீச் சரத்திற்கு அருகிலுள்ளது. இது மாடக்கோயில். யானை ஏறிக் கோயிலைச் சிதைக் காமலிருக்கக் கட்டப்பெற்ற பெரிய மேடை யுள்ள கோயில் தான் மாடக்கோயில் என்பது (கோச் செங்கணான் தமிழகத்தில் 70 மாடக் கோயில் களைக் சுட்டினான் என்பது வரலாறு )} தமது சாய்க்காட்டுச் சுவாமியின் பெயர் 'சாயாவனேசு வரர். அம்பிகையின் பெயர் குயிலு மொழியம்மை. கோஷாம்பாள் என்றும் சொல்வர். இந்தச் சாய்க் காட்டில் தான் இயற்பகை நாயனார் மனைவியை அடியார் ஒருவருக்குக் கொடுத்துத் திரும்பியதாகக் கதை. இதற்கு வடக்கே மேலூர் என்ற மேலப் பள்ளத்திலுள்ள சுவாமியின் பெயர் பிரியா வணங்கீசுவரர். இங்கேதான் இயற்பகையின் மனைவியைத் தனியேவிட்டு, அடியாராக வந்த இறைவன் பிரிந்தார், சாய்க்காட்டில் மார்கழியில் ஐந்து நாட்கள் விழா நடக்கும். இந்த விழாவில் இயற் பகையின் வரலாறு சம்பந்தமான காட்சிகள் காட்டப்பெறும். 8. வெண்காடு (திருவெண்காடு): சீகாழியிலிருந்து 7 கல் தொலைவிலுள்ளது பேருந்து வசதி உண்டு. திருக்கோயிலுக்குள் சூரிய தீர்த்தம், சந்திரதீர்த்தம், அக்கினி தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இம்முக்குள நீராடி இறைவனை வழிபடு வோர் மக்கட் பேறுடன் வரம் எல்லாம் பெறுவர் (சம்பந்தர் 2.48.2). இங்ஙனம் வழிபட்ட அச்சுத களப்பாளர் மெய்கண்டார் என்ற சந்தான குர த-10