பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

150 தம்பிராள் தோழர் டாம் முறை வருகை ) நின்று (பதிகம் இல்லை) அத்திருப்பதி யில் திருவவதாரம் செய்தருளிய முத்தமிழ் விரகராகிய காழிப்பிள்ளையார் திருவடிகயைப் பரவிப் போற்றிக் குரு காவூர் என்ற திருப்பதிறை நோக்கி வருகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், மூவாத முழுமுதலார் முதற்கோலக் கா அகன்று தாவாத புகழ்சண்பை வலங்கொண்டு சென்றிறைஞ்சி நாவார்முத் தமிழ்விரகர் நற்பதங்கள் பரவிப்போய் மேவார்தம் புரஞ்செற்றார் குருகா வூர் மேவு வார்.18 என்று சாட்டுவார். இங்ஙனம் குருகாவூருக்கு வரும் வன் றொண்டர் பசியாலும் நீர்வேட்கையாலும் வருந்துவதை அறிந்த சிவபெருமான் வழியிடையே ஓர் அந்தணர் வடிவங் கொண்டு தண்ணீரும் பொதிசோறும் கொண்டுவந்து வெயில் வெப்பம் நீங்க நிழல்தரும் பந்தரையும் உண்டாக்கி நம்பி யாரூரை எதிர்நோக்கி யிருக்கின்றார். அப்போது நாவலூர் வேந்தர் அடியார் திருக்கூட்டத்துடன் அவ்விடத்தே போந்து பத்தரின் கீழே போய் அங்குள்ள மறையவர் பக்கலிலே 'சிவாய நம' என்று ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டே அமர் கின்றார். வேதியராய் வந்து எழுந்தருளியுள்ள சிவபெரு மான் அவரை நோக்கி "நீவிர் பசிமிக்குள்ளவராகக் காணப் படுகின்றீர்; யான் கொணர்ந்துள்ள பொதி சோற்றையுண்டு தண்ணீர் பருகி பசியைத் தணித்துக் கொண்டு இளைப் பாறு வீர்களாக" என அன்புடன் வேண்டிக் கொள்ளூகின்றார். தம்பிரான் தோழகும் அதற்கிசைத்து அவர் அன்புடன் நல்கிய 16. பெ. பு : ஏயர்கோன் - 155