பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(2) 151 பொதி சோற்றை வாங்கி அடியார்களுடன் அமுது செய் கின்றார்; உடன் வந்த பரிசனங்களையும் உண்ணும்படி செய் கின்றார். பொதிசோறும் யாவருக்கும் போதுமான அளவுக்குப் பெருகி வளர்கின்றது. அறவாழி அந்தணர் அளிக்கும் சோறு அல்லவா? உரிய நேரத்தில் உணவளித்து உய்வித்த மறையவரைப் பாராட்டி அடியார்களுடன் துயி லமர்கின்றார் தம்பிரான் தோழர், இந்நிலையில் மறையவராய் வந்த இறைவன் பந்தருடன் மறைந்தருளுகின்றார். துயில் உணர்ந்தெழுந்த நாவலூரர் மறையவரைக் காணாமல் வியப்பெய்துகின்றார். இவ்வாறு வந்து அருள் புரிந்தவர் ஆழ்நிழற் கீழிருக்கும் குருகாலூர்ப் பெருமானே என்று தெளிகின்றார். "இத்தனையாமாற்றை அறிந்திலேன்" (7.29) என்று தொடங்கும் செந்தமிழ்ப் பாமாலையைப் பாடிக் கொண்டே திருக்கோயிலை அடை கின்றார். இப்பதிகத்தின், பாடுவார் பசிதீர்பாய் பரவுவார் பிணிகளைவாய் ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே காடுநல் விடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே குருகாலூர் வெள்ளடை நீயன்றே. (3) என்ற மூன்றாவது பாடல் பொதி சோறு நல்கிய வரலாற்றைக் குறிப்பிடுகின்றது. பாடல்களால் 'பரமனைத் தொழுது உளங்குளிர்கின்றார் தம்பிரான் தோழர். 17. குருக்காவூர் (திருக்கடாவூர்). சீகாழியிலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. இறைவன் சுந்திருக்குக் கட்டமுது தந்ைைதப் பதிகப் பாசுரம் கூறுகின்றது.