பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(2) i53 யாரைத் திருமணம் புரிந்து, சின்னாட்கள் ஒற்றியூரில் தங்கி யிருந்த தம்பிரான் தோழர் திருவாரூர் நினைவால் ஊர் இரும்பும் போது சில தொண்டை நாட்டுத் தலங்களை பும்" சில நடுநாட்டுத் தலங்களையும் சேவித்துக் கொண்டு சோழ நாட்டை அடைகின்றார். முதலில் திருவாவடு துறையை' எய்துகின்றார். இஃது இரண்டாம் முறை வருகை. இத்திலை யில் அவர் திருமேனியில் புகர் (மேக) தோய் தோன்றிவருத்து கின்றது. அடியார்கள் வரவேற்கத் திருவாவடுதுறை திருக் கோயிலை அடைகின்றார். கங்கைவாச் சடையாய்” (7.70) என்ற திருப்பதிகம் பாடி அங்குக் கோயில் கொண்டிருக்கும் மாசிலாமணியை வழுத்துகின்றார். - . கங்கைவார் சடையாய் கனநாதா காலனே காமனுக்கு அேைல பொங்குமாகடல் விடமிடற் நானே பூத நாதனே புண்ணியா புனிதா செங்கண் மால் விடையாய் தெளிதேனே தீர்த்தனே திருவா வடுதுறையுள் அங்கணாளனை அஞ்சல்என் றருளாய் காரெனக்குறவு அமரர்கள் ஏறே. (1) என்பது இச்செந்தமிழ் மாலையின் முதல் வாடாமலர். இப் பதிகத்தின், கண்ணிவேள் உடம்பில் அடுநோயால் கருத்தழித்து உனக்கே பொறையானேன். (2) மதியிலேன் உடம்பில் அடுநோயால் மயங்கி னேன்மணி பேமணவாளா, (3) 19. தொண்டைநாட்டுத் திருத்தல வழிபாடு காண்க. 20. நடுநாட்டுத் திருத்தல வழிபாடு காண்க. 21. ஆவடுதுறை-5 - வது சட்டுரை 18 - வது அடிக் குறிப்பு காண்க.