பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தம்பிரான் தோழர் ஆளுடைய பிள்ளையார் பிரபந்தங்களில் முருகவேள் திரு வவதாரமே என்று போற்றவில்லை; சேக்கிழாரடிகளும் அம்மையப்பர் அளித்த சிவஞானப் பாலுண்டு வளர்ந்தமை பற்றி ஆளுடைய பிள்ளையாராயினார் எனக் கூறினாரே யன்றி முருகனே ஆளுடைய பிள்ளை யாராகப் பிறந்தருளி னார் என்று யாண்டும் குறிப்பிடவில்லை. இங்ங்ணமே அப்பரடிகளின் முற்பிறப்பைப்பற்றி எவரும் குறிப்பிடவில்லை. மருள் நீக்கியார் என்ற பெயருடன் அலகில் கலைத்துறை தழைப்ப, அருந்தவத்தோர் நெறி வாழ, ஒளிவிளங்குகதிர் போல வந்து பிறந்தருளிளார் என்ற அளவில்தான் சேக்கிழாரடிகள் குறிப்பிட்டுள்ளார்; இவர் தம் முன்னை நிலைபற்றி எந்தக் குறிப்பும் இல்லை. சிவகணத் தலைவரொருவர் மணிவாசகராகப் பிறந் தருளினார் என்று திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகின்றது. பரஞ்சோதியாரின் திருவிளை பாடற் புராணத்தில் இந்தக் குறிப்பு இல்லை. கடவுண் மாமுனிவர் இயற்றிய திருவாதவூர்ப் புராணத்திலும் பூர்வ பிறப்பைப்பற்றிய குறிப்பு காணப் பெறவில்லை. திருப்பெருந்துறைப் புராணத்தில் இவர்தம் பிறப்பு பற்றிய குறிப்பில் இவர் சிவகண நாதர் ஆயிரவர்களுன் ஒருவர் என்று அறியக் கிடக்கின்றது. இவர்கள் ஒருநாள் சிவ பெருமானை வணங்கி நின்று ஆகமப் பொருளை அறிவுறுத்தி பகுளுமாறு வேண்ட, அவர்தம் விருப்பத்தை நிறைவேற்றத் திருவுளங் கொண்ட சிவபெருமான், திருவுத்தர கோச மங்கையில் அந்தணராகி அவர்கட்கு ஆகமப் பொருளை உபதேசித்துக் கொண்டிருக்கையில், வானோர் தலைவனாகிய இந்திரன் பலவகை அணிநலம் திகழ திருவுலாப் போதர, கனநாதர்களில் ஒருவர் அவ்வுலாக் காட்சியில் கருத்தைச் செலுத்த, இதனைக் கண்ட சிவபெருமான், கணநாதராகிய அவரை நோக்கி, 'பிள்ளாய், நீ நாம் கூறிய உபதேசப்