பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. நால்வருள் இவர்தம் சிறப்புநிலை அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற சமயகுரவர் நால்வருள் சுந்தரரின் சிறப்புநிலை தனி யாகத் தென்படுகின்றது. பிறப்பு: தனிச்சிறப்பு வாய்ந்தது. திருக்கயிலாய மலை யிலே சிவபெருமானின் அடியார்களுள் ஒருவரான ஆலால சுந்தரரே இப்பூவுலகில் சுந்தரராகப் பிறந்தார் என்று சேக்கிழார் பெருமான் இவர்தம் முன்னைய நிலையைக் காட்டுகின்றார். அங்ங்னமே இவர்தம் துணைவியார் களாகிய பரவையார், சங்கிலியார் இவர்தம் முன்னைய நிலை கள் காட்டப்பெறுகின்றன. இருவரும் கமலினி, அனிந்திதை என்ற உமாதேவியின் சேடியர்களாகக் காட்டப்பெறு கின்றனர். சிவபெருமானின் திருமகனாகிய முருகப் பெருமானே திருஞான சம்பந்தராக அவதரித்தார் என்று கவிச்சக்கர வர்த்தியாகிய ஒட்டக்கூத்தரும், திருப்புகழ் ஆசிரியராகிய அருணகிரியாரும் கூறியிருப்பினும் சீகாழிப் புராணத்திலும் இத்தகைய குறிப்பு இருப்பினும் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் திருவருளால் திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்ற சிவனடியார்களின் வரலாறுகளை வகைப் படுத்துணர்த்திய நம்பியாண்டார் நம்பி தாம் பாடியுள்ள