பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தம்பிரான் தோழர் பாசத்தளையை அகற்றுதற் பொருட்டு வன்றொண்டரது தோழமையைத் தந்தாய்' என்று மறுமொழி தருகின்றார். இன்னும் ஒரு விண்ணப்பம் உள்ளது' என்று கூறி, மறை களாலும் முனிவர்களாலும் அளவிடுதற்குரிய பெருமானே, நின்னைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு திருஉலாப் புறம் என்ற செந்தமிழ்ப் பனுவல் ஒன்றைப் பாடி வந்துள் ளேன். அதனைத் திருச்செவிசாத்தி ஏற்றருளவேண்டும்: என்று வேண்டுகின்றார். வேண்டுவார்க்கு வேண்டுவதை அருளும் ஈசனும், 'சேரனே, அவ்வுலாவைச் சொல்லுக’ எனப் பணிக்க, சேரமானும் அதனைக் கயிலைப் பெருமான் திருமுன் எடுத்துரைத்து அரங்கேற்றுகின்றார். இதனை உடனிருந்து கேட்ட மாசாத்தனார் அத்தெய்வப் பனுவலை உளத்துக்கொண்டு சோழ நாட்டிலுள்ள திருப்பிடஆசிலே வெளிப்படச் சொல்வி தமிழகத்தில் வழங்கச் செய்கின்றார்; என்று சேக்கிழார் பெருமான் தமது திருத்தொண்டர் புராண்த்தில் குறிப்பிடுகின்றார்.' சேரமான் பெருமாள் அன்புடனும் பக்தியுடனும் கேட்பித்த திருவுலாப்புறத்தை ஏற்றுக் கொள்ளுகின்றான் கயிலை நாதன். பின்பு அவரை நோக்கி, பெருமாrே, நீயும் ஆரூரனும் நம்பால் நிலைபெற்றிருப்பீர்களாக எனத் இருவருள்புரிகின்றார். சிவபெருமான் ஆணையிட்டவண்ணம் நம்பியாரூரர் அணுக்கத் தொண்டுபுரியும் ஆலால சுந்தர ராகவும், சேரமான் பெருமாள் சிவகணத்தலைவராகவும் திருக்கயிலையில் திருத்தொண்டுபுரியும் பேரின்ப வாழ்வை அடைந்து இன்புறுகின்றனர். நம்பியாரூரரை மணந்து வாழ்ந்த பரவையாரும் சங்கிவி யாரும் உமையம்மையின் திருவருளாலே திருக்கயிலையை அடைந்து கமலினி, அநிந்திதை என்ற முன்னைய பேரில் உமையம்மைக்குத் தாங்கள் முன்பு புரிந்து வந்த அணுக்கத் தொண்டினை மேற்கொண்டு மகிழ்கின்றனர். 11. பெ.பு: வெள்ளானை-52