பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருத்தலப் பயணம் 189 வானெனை வந்தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே, (i) எனவும், துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்டனேன். பரமல்லதொடு வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே. (6) எனவும் தம்பிரான் தோழர் தமக்கு இறைவன் செய்த பெரு நலத்தை எடுத்துரைத்தலால் நன்கு விளங்கும். தம்பியாரூரரை வெள்ளை யானை தன்மீது சுமந்து சென்றபொழுது நிலமெங்கும் அதிர்ந்து அசைந்தது என்பதும், விசும்பும் நிலைகெட்டு அதிர்ந்தது என்பதும், வழியிடையே எதிர்ப்பட்ட மலை முகட்டின்மேல் யானை அடி வைத்து ஏறியபொழுது கடலரசனாகிய வருணன் நம்பியாரூரரின் திருவடிகளால் மலர்தூவி வழிப்பட்டனன் என்பதும், நிலைகெட விண்ணதிர நிலமெங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானையேறி வழியே வருவேன் எதிரே அலைகட லால் அரையன் அலர்கொண்டு முன்வந்திறைஞ்ச. (7) என வரும் திருப்பாடற் பகுதியால் அறியலாகும், வேத ஆகமங்களைக் கற்றுவல்ல மெய்யடியார்கள் கூறும் அரன் நாமமும், தோத்திரங்களும், வேத் ஒலியும் எதிர்ந்திசைப்பச் சிவனடித் தொண்டு பூண்ட வாணன் என்பான் தம்பிரான் தோழரை வரவேற்றனன் என்பதும், இந்திரன், திருமால் நான்முகன் முதலிய தேவர்கள் எல்லாம் த பியாரூரரை