பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i88 தம்பிரான் தோழர் மந்திரம் ஒன்றறியேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களால் துரிசேசெயும் தொண்டனெனை அந்தர மால்விசும்பில் அழகானை அருள் புரிந்த(து) உந்தரமோ நெஞ்சமே நொடித்தான்’ மலை உத்தமனே. (4) இப்பதிகம் நம்பியாரூரர் இறைவனருளால் தாம் பெற்ற பெருஞ்சிறப்பினைக் குறித்துப் பாடப் பெற்றது. கயிலைப் பெருமானது திருவருளாணையால் களிற்றுடன் வந்த அமரர்கள், வன்றொண்டரை வலம் வந்து அவரை வெள்ளை யானையின்மீது அமர்த்தினர் என்பது. tFF : : மதித்தம்ரர் வலஞ்செய்தெனை ஏறவைத்த ஆனை அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே.(2) எனவும், விண்ணுல கத்தவர்கள் விரும்பவெள்ளை யானையின் மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே. (5): எனவும் வரும் அத்திருப்பதிகப் பாடற் பகுதிகளால் நன்கு புலனாகின்றது. இங்ஙனம் வெள்ளை யானையின்மீது செல்லும் நம்பியாரூரது யாக்கை ஊனுடம்பால் உளவாம் மாசு நீங்கி இறவா நிலைமைத்தாகிய தூயதிருமேனியாய் விளங்கிற்று என்பது, 9. நொடித்தான்-சிவபெருமான். நொடித்தல் - அழித் தல், இறைவன் எழுந்தருளிய மலை கைலை; அது நொடித்தான் மலை.