பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருத்தலப் பயணம் - 18? சேரமான் தோழர். வானவர் பூமழை பொழிந்திட யானை யுடன் வந்ததேவர்கள் சிேன்னி°ழேரை வலம் வந்து வணங்கி வெள்ளை ஆயானையின் மீது அமர்த்துகின்றனர். யானையின் மீது இங்ர்ந்த வன்றொண்டர் தம்முடைய உயிர்த் தோழரும் மன்னுயிர்கள் சாற்றும் மாற்றங்களை யெல்லாம் உள்ளவாறு உய்த்துணரவல்ல திருவருட் செல்வரு மான சேரமான் பெருமானைத் தம் மனத்திற்’ சிந்தித்துக் கொண்டு கயிலையை நோக்கிச் செல்கின்றார். சேரமான் பெருமாள் தன் உயிர்த் தோழராகிய நம்பி யாரூரரின் பேரன்பின் திறத்தைத் திருவருளாற்றலால் உணர்கின்றார். அருகே நின்ற குதிரை மீதேறி திருவஞ்சைக் கள ஆலயத்திற்கு வருகின்றார்; வெள்ளை யானையின்மீது விசும்பிற் செல்லும் தம் தோழரைக் காண்கின்றார். தமது குதிரையின் செவியில் திருவைந்தெழுத்தினை ஒதவே, அது வான்வழியே செல்லும் ஆற்றலைப் பெறுகின்றது. உடனே அது சேரமானுடன் வானில் சென்று தெய்வத் தன்மை வாய்ந்த வெள்ளை யானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்லத் தொடங்குகின்றது. அப்பொழுது சேரமான் பெரு மானைப் பின்தொடர்ந்து சென்ற படைவீரர்கள் குதிரை மீது செல்லும் மன்னரைத் தம் கண்ணுக்குப் புலபடும் எல்லை வரைக் கண்டுப் பின்னர்க் காணப்பெறாது வருந்து கின்றனர். தம் தலைவரைப் பிரியாது உடன் செல்ல வேண்டும் என்னும் மனத்திட்பம் உடைய அவ்வீரர்கள் தம் உடம்பை வெட்டி வீழ்த்தி வீர உடலைப் பெற்று விசும்பின் மீது எழுந்து சேர வேந்தனைச் சேவித்துச் செல்லுகின்றனர். தேவர் குழாமும் சேரமான் பெருமாளும் முன் செல்ல நம்பியாரூரர் பின் செல்லுகின்றார். செல்லும் போதே, "தானெனை முன் படைத்தான்." (7.108)என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு திருக்கயிலாய மலையின் தென் திசை வாயிலை அணுகுகின்றார். இதில் ஒரு திருப் பாடல்: . - -