பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#86 தம்பிரான் தோழர் கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டுகண்டம் கடுகப்பிரமன் தலையைந் திலுமொன் றறுத்தாய் கடலங்கரைமேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.” என்ற எட்டாவது திருப்பாடலால் புலனாகும். இது திருமங்கையாழ்வாரின், வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே." - - என்று பாசுரந்தோறும் பல்லவிபோல் இறும் திருவிண்ணகர். பற்றிய திருமொழியை நினைக்கச் செய்கின்றது. - - அடியார்களின் கருத்தறித்து முடிக்கவல்ல கண்ணு தலப்பன், நம்பியாரூரரின் பாசத் தலையை அகற்றி ஈறிலாப் பேரின்ப வாழ்வைத் தந்தருளத் திருவுள்ளங் கொள்ளுகின் றான். நம்பியாரூரரைத் திருக்கயிலாயத்திற்கு அழைத்து வரும்படி வெள்ளை யானையுடன் அயன் முதலிய தேவர் களைத் திருவஞ்சைக் களத்திற்கு அனுப்பியருளுகின்றான். கயிலை நாதனின் அருளானையினைச் சிரமேற்கொண்டு வெள்ளை யானையுடன் தேவர்கள் திருவஞ்சைக்களத் திருக் கோயிலை அடைகின்றனர். தேவர்கள் நம்பியாரூரரைக் காண்கின்றனர். அவரை வணங்கி நின்று, ‘ஐயனே தாங்கள் இவ்வெள்ளை யானையின்மீது அமர்ந்து திருக்கயிலைக்கு எழுந்தருளுதல் வேண்டும் என்பது சிவபெருமானின் அருளிப் பாடாகும். தாங்கள் ஏவியவற்றைச் செய்ய நாங்கள் காத்திருக்கின்றோம்’ என்று விண்ணப்பிக்கின்றனர்." கயிலைப் பயணம் : கண்ணுதலப்பனின் திருவருளை எண்ணிச் செய்வதொன்றறியாது தம்மை மறந்த நிலையில் அந்த அருளாணையினை விரைந்து ஏற்றுக் கொள்ளுகின்றார் 7. பெரி. திரு. 6.1 8. பெ. பு : வெள்ளானை-33