பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருத்தலப் பயணம் 185 செல்கின்றார். தாம் பூவுலகில் வாழவேண்டிய நாட்கள் முடி வெய்தும் நிலை வருகின்றது. பாய கங்கைசூழ் நெடுஞ்சடைப் பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்தும் சேய நன்னெறி குறுகிடக் - குறுகினார் திருவஞ்சைக் களத் தன்னில்,க என்று இந்நிலையைக் குறிப்பிடுவர் சேக்கிழார் பெருமான்; திருக்கோயிலில் புகுந்த சேரமான் தோழர் கோயிலை வலங் கொண்டு நெஞ்சம் நெக்குருகிக் கண்ணிர் சோர இறைவனின் பூங்கழலினைப் போற்றுகின்றார்; உலகப் பற்று கழலத் தொடங்குகின்றது. தமிழ்த்திருப்பதிகம் பிறக்கின்றது. அரிய செய்கையில் அவனியில் விழுந்தெழுந்து அலைப்புறும் மனைவாழ்க்கை சரிய வே தலைக் குத்தலை மாலை என் றெடுத்தனர் தமிழ்மாலை." என்று இந்நிலையைப் பாடுகின்றார் சேக்கிழார் அடிகள். இத் திருப்பதிகத்தின் உட்குறிப்பு ‘அடியேன் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்து நீங்கினேன். அடியேனை நின் திருவடியில் சேர்த்தருளல் வேண்டும்’ என்பது. இது தலைக் குத்தலை" (7.4) என்ற பதிகத்தின், - - வெறுத்தேன் மனைவாழ்க்கையை விட்டொழிந்தேன் விளங்குங் குழைக்காதுடை வேதியனே இறுத்தாய் இலங்கைக் கிறையாயவனைத் தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக் 5. பெ. பு : வெள்ளானை:28 6. பெ. பு: டிெ-29