பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தம்பிரான் தோழர் செய்வ தொன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்து "என் ஐயன் அணைந்தான் ஏனை ஆளும் அண்ணல் அனைந்தான் ஆரூரின் சைவன் அணைந்தான் என் துணையர் தலைவன் அணைந்தான் தரணி ஏலாம் வய்ய அணைந்தான் அணைந்தான்' என்றோகை முரசம் சாற்றுவித்தார். பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்துப் பெரியோர் எழுந்தருளப் பொருவில் நகரம் அலங்கரித்துப் பண்ணிப் பயணம் புறப்படுவித்(து), அருவி மதமால் யானையினை அணைந்து மிசைகொண் டரசர்பெருந் தெருவுங் கழிய எதிர் வந்தார் சேரர் குலம்உய்த் திடவந்தார்." என்று வருணித்து மகிழ்கின்றார். நம்பியாரூரர் வஞ்சி மாநகரை அடைந்த பிறகு சேர மான் பெருமாள் அவரை எதிர் கொண்டு வரவேற்று வண்ங்கி யானைமேல் அமர்த்தி நகரத்துக்கு அழைத்து வருகின்றார். அரியணையில் அமர்த்திப் பூசித்துப் போற்றுகின்றார். இந்தப் பயணத்தின்போது பல மலை நாட்டுத் தலங்களைச் சேவித்துத் தம் கெழுதகை நண்பருடன் அளவளாவி மகிழ்ச்சி யுடன் பொழுது போக்குகின்றார். ஒரு நாள் சேரவேந்தர் திருமஞ்சன சாலையில் நீராடிக் கொண்டிருக்கும்பொழுது நம்பியாரூரர் திருவஞ்சைக் களத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனை வழிபடச் 4. பெ. பு : வெள்ளானை.16, 17, 18