பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருத்தலப் பயணம் 183 இன்ன தன்மையன் என்றறியொண்ணா எம்மானை எளிவந்த பிரானை அன்னம் வைகும் வயற்பழனத்தணி யாரூரானை மறக்கலு மாமே {7 59: ) என்ற முதற் பாடலைக் கொண்ட திருப்பதிகத்தைப் பாடித் தமது ஆற்றாமையினைச் சேரர் பெருமானுக்கு உணர்த்தி விடை பெற முயல்கின்றார். சேரமான் பெருமாளும் வரிசை கள் பலசெய்து வழியனுப்பி வைக்கின்றார். நம்பியாரூரரும் திருவாரூர் வந்தடைகின்றார். - இாண்டாம் நிலை :பல நாட்கள் கழிகின்றன. புற்றிடங் கொண்ட பெருமானை வழிபட்டு மகிழ்ந்திருக்கும் நம்பி யாருரருக்குத் தம் கெழுதகை நண்பர் சேரமான் பெருமாளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. சோழ நாட்டைக் கடந்து கொங்கு நாட்டிற்கு வருகின்றார். இப் பொழுதுதான் முதலையுண்ட பாலகனின் உயிர் மீட்பு நடை பெறுகின்றது (முன் இயல் காண்க). இந்தச் செய்தி சேரமான் பெருமாளுக்கு எட்டுகின்றது. அவருக்கு வரவேற்பு நிகழ்த்து வதற்கு சேரர்கோன் செய்த ஏற்பாடுகதர் பற்றியதுமான விவரங்களைப் சேக்கிழார் பெருமான், 'முன்னாள் முதலை வாய்ப்புக்த: மைந்தன் முன்போல் வரமீட்டுத் தென்னார் ஊரர் எழுந்தருளா நின்றார்' என்று சேரர் பிரார்க்கு அந்நாட் டரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்பப் பொன்னார் கிழியும் மணிப்பூணும் காசும் தூசும் பொழிந்தளித்தார்.