பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தம்பிரான் தோழர் 'தல்ல தோழர் நம்பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார்; 'எல்லை இல்லாத் தவமுன் பென் செய்தோம் இவரைத் தொழஎன்பார்; செல்வம் இனியென் பெறுவதுநம் சிலம்பு நாட்டுக் கென உரைப்பார்; "சொல்லுந் தரமோ? பெருமாள்செய் தொழிலைப் பாரீர்" எனத்தொழுவார்." என்று காட்டுவர். அரண்மனைக்குள் சென்றதும் ஆரூரரை அரியணையில் அமரச் செய்து தம் தேவிமார்கன் பொற் குடத்தில் நன்னீர் ஏத்திப் பணி செய்ய வன்றொண்டர் திருவடிகளை விளக்கி நறுமலர் தூவி அருச்சிக்கின்றார். அன்பின் பெருக்கால் இவையெல்லாம் செய்யப்பெறுதலின் இவற்றை மறுத்தாமல் ஏற்றுக் கொள்கின்றார் நாவலூர் upকস প্রশ্ন "ি, இவ்வைபவங்கள்ை,உடனிருந்து திருவமுது செய்விக்கின்றார். இங்ஙனம் ஆரூரரைத் தம்தலை நகரில் பலநாட்கள் அமர்த்திய சேர மன்னர் "செண்டாடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்றுப் பெருஞ்சிறப்பும், ஆடல் பாடல் இன்னியங்கள் முதலாகப் பலவக்ைக் களியாட்டங்கள் நிகழச் செய்து தம் தோழரை மகிழ்விக்கின்றார். அவருடன் அளவளாவித் தாமும் மகிழ்கின்றார். இங்ஙனம் பொழுது போக்கும் நாட்களில் ஒருநாள் திருவாரூர்ப் பெருமானைக் கண்டு இறைஞ்சி இன்புற வேண்டும் என்ற எண்ணம் தலைதுாக்குகின்றது. பொன்னு மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப் பின்னை யென் பிழையைப் பொறுப்பானைப் பிழையெ லாந்தவிரப் பணிப்பானை 3. பெ. பு: சழறிற்றறிவார்.148.