பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருத்தலப் பயணம் #81 செல்கின்றார். அஞ்சைக் களத்து அப்பனை வணங்கி மகிழ்ந்த சேரமான் தோழர் முடிப்பது கங்கை (7.44 என்னும் திருப் பதிகத்தைப் பாடித் துதித்துத் திருக்கோயிலினின்றும் வெளி வருகின்றார்.இப்பதிகத்தின் முதற் பாடல். முடிப்பது கங்கையும் திங்களும் செற்றது மூவெயில் நொடிப்பதுமாத்தி ரைநீறெ ழக்கனை நூறினார் கடிப்பது மேருமென் றஞ்சு வன்திருக் கைகளால் பிடிப்பது பாம்பன்றி இல்லையோ எம்பி ரானுக்கே..(1) என்பதாகும். சேரமான் பெருமாள் நம்பியாரூரரை பட்டத்து யானை மேல் அமரச் செய்து தாம் அவர் பின்னே அமர்ந்து இருகை களாலும் வெண் சாமரை வீசிக் கொண்டு தம் அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றார். அங்ங்ணம் செல்லும்பொழுது வழிநெடுகே இருமருங்கும் குழுமியிருந்த மக்கள் வாழ்த்து வதைச் சேக்கிழார் பெருமான், நீராடி ஈர ஆடையுடன் செல்லவேண்டும்; பட்டுடுத்தி யும் செல்லலாம். அஞ்சைக் களத்தப்பர் தரை மட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார். தலைக்கு தலை மாலை என்னும் பதிகத்தின் ( 4) இரண்ட்ாவது திருப்பாடல் கூறுவதைத் திரு மேனியின் சிரசில் சேவிக்கலாம். முதல் சுற்றின் ஒரு சிறு அறையில் சேரமானும் தம்பிரான் தோழரும் செப்புத் திருமேனிகளாகக் காட்சி தருகின்றனர். ஆடிசுவாதியன்று தமிழ் நாட்டு மக்கள் திரளாகச் சென்று வழிபடுகின்றனர்.