பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 - தம்பிரான் தோழர் இன்ப வெள்ளத் திடைநீந்தி ஏற மாட்டா தலைவார் போல் என்பும் உருக உயிர்ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார்:ே

என்று காட்டுவர். இங்ஙனம் சேரமான் 'பெருமாளும் நாவலூர் மன்னரும் உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என அன்பினால் அளவளாவி மகிழும் தோழமையின் பெருமை யைக் கண்ட சிவனடியார்கள் தம்பிரான் தோழரைச் 'சேரமான் தோழர்' என்று வழங்கிச் சிறப்பிக்கின்றனர். நம்பியாரூரரின் மலைநாட்டுத் திருத்தலப் பயணம் இரண்டு நிலையில் நடைபெற்றது; மலை நாட்டில் உள்ளது :) அஞ்சைக் களம் (கொடுங்கோளூர்) என்ற ஒன்றேயாகும், முதல்நிலை : சேரமான் பெருமாள் முதல் முறை வந்த போது நம்பியாரூரரும் சேரவேந்தரும் பாண்டி நாட்டுத் தலங்கள் பலவற்றை வழிபட்ட பிறகு சேரமான் பெருமாள் சேரமான் தோழரைத் தம் நாட்டிற்குச் இட்டுச் செல்லு கின்றார். வழியிலுள்ள சோழ நாட்டுத் தலங்களை வழி பட்டுக் கொண்டு கொங்கு நாட்டு வழியாக கொடுங் கோளுரை அடைகின்றனர். மலை நாட்டு மக்கள் மகிழ்ந்து இவர்களை வரவேற்கின்றனர். ஒருநாள் சேரமான் பெருமாள் நம்பியாரூரரைத் திருவஞ்சைக்களம்” என்னும் திருக்கோயிலுக்கு அழைத்துச் 1. பெ. பு : கழறிற்றறிவார்-54, 65 2. ஆஞ்சைக் களம் (திருவஞ்சிக்குளம்) இது திருச்சூரி லிருந்து 30 கல் தொலைவிலுள்ளது. திருச்சூரி லிருந்து கொடுங்கோளுர் rேanganore) செல்லும் பேருந்தில் கொடுங்கே ரூருக்கு எதிர்க் கரையில் இறங்கி உப்பங்கழி வழிய்ே (Back waters) வஞ்சி (சிறு படகு அமர்த்திக் கொண்டு நேரே அம்பல்ம் (கோயில்) போகலாம், சேரநாட்டு முறைப்படி