பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. மலைநாட்டுத் திருத்தலப் பயணம் சேரநாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் நாயனார் நம்பியாரூரரின் பெருமையினைத் தில்லையில் திரு நடனம் புரியும் கூத்தப் பெருமான் அறிவுறுத்தியருளக் கேட்டுணர்கின்றார். நாயனாருக்கு நம்பியாரூரரைக் காண வேண்டும் என்ற பேரார்வம் ஏற்படுகின்றது. தில்லை அம்பல வாணரை வழிபட்டுத் திருவாரூரை நோக்கி வருகின்றார். சேரமன்னரது வருகையை அறிந்த நம்பியாரூரர் சிவனடியார் குழாத்துடன் அவரை எதிர்கொண்டு அழைக்க வருகின்றார். தம்பியாரூரைக் கண்ணுற்ற கழறிற்றறிவார் (சேரமான் பெருமாள்) அவருடைய திருவடிகளில் வீழ்த்து இறைஞ்சு கின்றார். நம்பியாரூரரும் சேரவேந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரை இருகைகளாலும் எடுத்துத் தழுவிக் கொள்ளுகின்றார். இந்நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான், சேரலனார் சந்த விரைந்தார் வன்றொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் முன்பு பணிந்த பெருமானைத் தாமும் பணிந்து முகந்தெடுத்தே அன்பு பெருகத் தழுவவிரைந் தவரும் ஆர்வத்தொடு தழுவ