பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தம்பிரான் தோழர் சென்று மங்கல வாத்தியம் முழங்க அச்சிறுவனுக்கு. உபநயனமும் செய்வித் தருளுகின்றார். மறைச் சிறுவனை முதலை விழுங்கிய செய்தி அவ்வூருக்குச் சென்ற தம்பிரான் தோழரின் திருவுள்ளத்தில் அடங்காத கவலையை உண்டு பண்ணியது என்பதை, வழிப்போவார் தம்மொடும் வந்துடன் கூடியமாணிநீ ஒழிவதழகோ சொல்லாய் அகுளோங்கு சடையானே பொழிலா ருஞ் சோலைப் புக்கொளியூரிற் குளத்திடை இழியாக் குளித்தமாணி எனைக்கிறி செய்ததே.{2} என்றும், புள்ளேறு சோலைப் புக்கொளியூரிற் குளத்திடை உள்ளிடப் புக்கமாணி எனைக்கிறி செய்ததே.(9) و از آri கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.(4) எனவும் நெஞ்சம் நெக்குருகி இறைவனையே சாடுதல் இரண்டு, ஒன்பது, நான்காம் பாடல்களால் அறிந்து மகிழலாம். இதன் பின்னர் தம் பிரான் தோழர் மலைநாட்டுக்கு எழுந்தருள்கின்றார், இந்த இரண்டாவது மலைநாட்டுப் பயணம் சயிலைப் பயணமுமாக முடிந்து மீளா உலகை அடைகின்றார் தம்முயிர் அனைய நண்பர் சேரமானுடன்.