பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்குநாட்டுத் திருத்தலப் பயணம் 177 வனது உடம்பைச் சென்ற ஆண்டுகளின் வளர்ச்சியை உடையதாகச் செய்கின்றான்; அவ்வுடம்பினுள்ல்ே மரித்த புதல்வனது உயிரைக் கொண்டுவந்து புகுத்துகின்றான். உடனே மடுவிலிருந்த முதலை வெளிப்பட்டு கரைக்கு வரு கின்றது; முன்பு தான் விழுங்கிய புதல்வனை உமிழ்கின்றது. இந்நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான், பெருவாய் முதலை கரையின்கண் கொடுவந் துமிழ்ந்த பிள்ளைதனை உருகா நின்ற தாய்ஓடி எடுத்துக் கொடுவந் துயிரளித்த திருவா ளன்.தன் சேவடிக்கீழ்ச் சீலமறையோ னோடு வீழ்ந்தாள்: மருவார் தருவின் மலர் மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள், மண்ணில் உள்ளார் அதிசயித்தார்: மறையோ ரெல்லாம் உத்தரியம் விண்ணில் ஏற விட்டார்த்தார் வேத நாதம் மிக்கெழுந்தது: அண்ண லாரும் அவினாசி அரனார் தம்மை அருமறையோன் கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினிமேல்" என்று மெய்மறந்து பாடி அநுபவிக்கின்றார். முதலை வாயினின்றும் வெளிப்பட்டு உய்ந்த மறைச் சிறுவனை நம்பியாரூரர் அவினாசிக் கோயிலுக்கு அழைத்துச் சென்று அருளாளனாகிய அவினாசிப் பெருமானைத் தொழு கின்றார். பின்னர் அவனைப் பிறந்த இல்லத்திற்கு அழைத்துச் 9. பெ. பு: வெள்ளானை-12 ,13 r த-12