பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தம்பிரான் தோழர் நீக்கிக் கொண்டு முகமலர்ச்சியுடன் அங்கு விரைந்து வந்து அடிகளை வணங்குகின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கி 'நீவிரோ புதல்வனை இழந்தவர்கள் என்று பரிவுடன் வினவு கின்றார். அவர்கள் மீண்டும் அடிகளை வணங்கி பெரியீர், அது முன்னர் நடந்தது. அது கிடக்க தங்களை நெடுங்கால மாகக் கண்டு வணங்கக் கருதியிருந்த எங்கள் அன்பு வீணா காமல் தாங்கள் சண்டு எழுந்தருளியது எமது தவப்பேறு' என்று மகிழ்ந்துரைக்கின்றனர். தம்மை அடைந்தார்களின் இடரைக் களைந்தருளவல்ல சேரமான் தோழர் இந்த வேதியரும் அவர்தம் துணைவியாரும் மகனை இழந்த துன் பத்தையும் மறந்து யான் இங்கு வருகை புரிந்தமைக்கு மகிழ் கின்றனர். இவர்தம் அன்பு மகனை முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்த பின்னரே அவநாசி இறைவனை இறைஞ்சுதல் வேண்டும்' என்று அருளிச் செய்கின்றார். பெற்றோர்களுடன் தம்பிரான் தோழர் மடுவின் கரைக்கு வருகின்றார். அவிநாசியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை நினைந்து எற்றான் மறக்கேன்" (7.92) என்ற திருப்பதிகத்தைப் பாடத் தொடங்குகின்றார். இப்பதிகத்தின், - - உரைப்பார் உரையுகத்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய் அரைக்காடரவா ஆதியும். அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்.அவிநாசியே கரைக்கான் முதலையைப் . பிள்ளை தரச்சொல்லு காலனையே (4) என்ற நான்காம் திருப்பாடலைப் பாடும்பொழுது அற்புத நிகழ்ச்சி நடைபெறுகின்றது. காலனாகிய இயமன், மடுவி லிருந்த முதலை வயிற்றில் முன் விழுங்கப் பெற்றிருந்த