பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுத் திருத்தலப் பயணம் 175 என வரும் புக்கொளியூர் அவிநாசிப் பதிகத்தில் நம்பியா . ரூரரின் அநுபவ மொழியாலும் அறியப்படும். . மூன்றாம் நிலை : புற்றிடங் கொண்ட பெருமானைப் போற்றி மகிழ்ந்திருந்த நாவலூரர் சில நாட்கள் கழிந்தபின் தம் நண்பராகிய சேரமான் பெருமாளை நினைக்கின்றார். மலை நாடு சென்று வரத் திருவுளங் கொள்ளுகின்றார். ஒரு நன்னாளில் சோழ நாட்டைக் கடந்து கொங்கு நாட்டை அடைகின்றார். திருப்புக் கொளியூர் அவிநாசி" என்னும் திருத்தலத்தை அணுகி வேதியர் தெரு வழியாகச் செல்லும் பொழுது ஒர் இல்லத்தில் மங்கல ஒளியும் அதற்கு எதிர்ப் புற மாக உள்ள மற்றொரு வீட்டில் அழுகையொலியும் எழு கின்றன. நம்பியாரூரர் மாறுபட்ட ஒலிகள் நிகழ்தற்குரிய காரணத்தை அங்குள்ளாரை நோக்கி வினவுகின்றார். அருகிருந்தவர் கூறியது : “ஒரு வேதியருக்கு இரண்டு ஆண்மக்கள். ஒத்த பருவத்தினாய் ஐந்து வயது நிரம்பப் பெற்ற அச்சிறுவர்கள் ஒரு மடுவில் நீராடினபொழுது அவ் விருவருள் ஒருவனை முதலை விழுங்கிற்று, மற்றொருவன் பிழைத்துக் கொண்டான். பிழைத்த சிறுவனுக்கு இப் பொழுது உபநயனம் நடைபெறுகின்றது. இம்மங்கல ஒலிக்கு இது காரணம். இது மரித்த சிறுவனை நினைப்பித்தமையால் வருந்திய பெற்றோர்தம் அழுகையொலி எதிர் இல்லத்தில் கேட்கக் காரணமாயிற்று'. இத்துயரச் செய்தி கேட்ட தம் பிரான் தோழர் சிந்தை கலங்கி நிற்கின்றார். இந்நிலையில் மைந்தன் இறந்ததை நினைந்து வருந்தும் பெற்றோர்கள் சுந்தரர் போந்த செய்தியறிந்து அழுகையை 9. அவிநாசி : திருப்பூரிலிருந்து 8 கல் தொலைவு. பேருந்து வழி. சுவாமியின் பெயரே தலத்திற்கும் பெயராயிற்று. முதலையுண்ட பாலனை உயிர்ப் பித்துக் கொடுத்த அற்புதம்நிகழ்ந்த தலம். முதலை இருந்த மடு இப்போது தாம்ர்ைக்குளம் எனப் படு கின்றது. சிறுவன் முதலை வாயினுட் புக்கு ஒளிந்த ஊர் புக்கொளியூர், . . .