பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தம்பிரான் தோழர் முடுகு நாறிய வடுகர்வாழ்முருகன் பூண்டிமா நகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கைதன்னொடும் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிராணிரே. (1) - என்பது முதற் பாடல். பதிகப்பாடலின் இறுதிதோறும் 'முருகன் பூண்டி மாநகர்லாய்...... எத்துக்கிங் கிருந்தீர் எம் பிராணிரே" என வினவிப் போற்றுகின்றார். இறைவனருளால் உடனே முன் வழி மறித்துப் பொருள் களைக் கவர்ந்த வேடுவர்கள் அனைவரும் தாம் பறித்துக் கொண்டு சென்ற பொருள்களையெல்லாம் அத்திருக் கோயிலின் வாயிலிலே கொண்டு வந்து குவிக்கின்றனர். அவ்வரும் பொருள்களைக் கண்ணுற்ற நம்பியாரூரர் இறைவன் திருவருளை வியந்து, அப்பொருள்களை முன் போற் பொதி செய்து முன்னே எடுத்துச் செல்லும்படி கூறி, அத்திருத்தலத்தினின்றும் புறப்பட்டு கொங்கு நாட்டைக் கடந்து திருவாரூரை அடைகின்றார். வந்தவுடன் பூங் கோயில் பெருமானைவழிபட்டுப் பரவையாரது மாளிகைவில் இனிது வாழ்கின்றார். . - கொங்கு நாட்டில் இரக்கமில்லாத சிந்தையினராகிய வடுக வேடுவர்கள் பல்கி வழிப்பறி செய்து வாழ்ந்தனர் என்பதும், சுந்தரர் செந்தமிழால் திருமுருகன் பூண்டி எம் பெருமானைச் செந்தமிழ்ப்பதிகத்தாற் போற்றி வணங்கிய பிறகு வழி ோவர்க்கு தீங்கு செய்து, வாழும் வேடர்களும் தம் கொடுந்தொழிலை நீங்கிச் சுந்தரரின் திருவடிகளைப் பணிந்து அடங்கி வாழ்ந்தனர் என்பதும், . எங்கேனும் போகினும் - எம்பெருமானை நினைந்த்க்கால் கொங்கே புகினும் X கூறைகொண்டாறலைப்பாரிலை (7.92:3)