பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுத் திருத்தலப் பயணம் 173 ஒன்றாகிய திருமுருகன் பூண்டி வழியாக வந்து கொண் டிருக்கின்றார் . - பூண்டிப் பெருமான் திருவிளையாடல் : இந்நிலையில் பூண்டிப் பெருமான் பூதகணங்களை வேடுவராகச் சென்று தம்பிரான் தோழரின் பொருள்களைக் கவர்ந்து கொள்ளு மாறு பணித் தருளுகின்றார். அங்ங்ணமே, அவர்கள் வேடுவர் களாகச் சென்று நிதிக்குவியலைச் சுமந்து செல்லும் சுமை யாட்களை வழிமறித்து அம்பினாலும் வேற்படைகளாலும் அச்சுறுத்தி அவர்களிடமிருந்த பொருள்களை எல்லாம் கவர்ந்து கொள்ளுகின்றனர். பொருள்களைச் சுமந்து சென்ற பணியாட்கள் நம்பியாரூர் அருகே சென்று சேர்கின்றனர். இதனைக் கண்ட வேடுவர் இறைவனருள் பெற்ற நம்பியாரூரை அணுகுதற்கு அஞ்சி அவ்விடத்தை விட்டு அகலுகின்றனர். இந்நிலையில் திருமுருகன் பூண்டியிலுள்ள திருக்கோயிலினுட் புகுந்து கொடுகு வெஞ்சிலை" (7.49) என்னும் திருப்பதிகம் பாடி இறைவனை இறைஞ்சுகின்றார், கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரலாமை சொல்வித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டாறலைக்குமிடம் 8. முருகன் பூண்டி (திருமுருகன் பூண்டி) , ஈரோடு கோவை இருப்பூர்தி வழியில் திருப்பூர் நிலையத்தி விருந்து 5 கல் தொலைவு. பேருந்து வழி. முருகன் பூசித்த தலங்களுள் ஒன்று சேரமான் பெருமாள் நாயனார் தம்பிரான் தோழருக்குக் கொடுத்த பெரும் பொருளைச் சிவபெருமா, வடுகவேடர் உருவில் பூதகணங்களை விட்டுக் கொள்ளை யடிக்கச் செய்து, பிறகு அவர் பதிகத்தைப் பெற்று ஆப்பொருளைத் திரும்பக் கொடுத்த அற்புதம் நிகழ்ந்த தலம். x -- .