பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நால்வருள் இவர்தம் சிறப்புநிலை 197 எழுந்த சிறப்பு: இவர்தம் வாழ்க்கையில் நடைபெறுகின்றது. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தின்படி திருப்பெருந்துறையில் குருவாக எழுந்தருளிய இறைவன் வாதவூரரை தோக்கி மாணிக்க வாசக’ என அழைத்தருளிய தாகக் கூறப்பெற்றுள்ளது. ஆக ஞானசம்பந்தர், நாவுக் கரசர், தம்பிரான் தோழர் (வன்றொண்டர்), மாணிக்க வாசகர் என்ற பெயர்கள் நால்வருக்கும் இறைவன் தொடர்பால் ஏற்பட்ட பெயர்களாகும் என்பது நினைவு கூரத்தக்கது, சுந்தரர் வாழ்க்கையில் பரவையாரது ஊடல் தீர்க்கும் பொருட்டு திருவாரூர் இறைவன் இருமுறை தாது சென்ற நிகழ்ச்சிகள் குறிப்பிடத் தக்கவை. இவர் பொருட்டு பரவை யாருக்கும் இறைவனாகவே காட்சியளிக்கின்றார்: சுந்தர ருக்கும் அக்காட்சி கிடைக்கின்றது. இங்கனம் ஏனைய மூவருடன் இவரை ஒப்பிட்டு நோக்கும்போது இவர்தம் தனிச்சிறப்பு நிலை ஒருவாறு புலனாகும்.