பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. அருளிச் செயல்களால் அறிபவை கம்பியாரூரர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்கள் அனைத்தையும் ஏழாம் திருமுறையில் ஒரே தொகுதியாக வகைப்படுத்தித் திருமுறை வகுத்தார் நம்பியாண்டார்நம்பி, இத்திருமுறையில் பித்தா பிறைசூடி" என்னும் திருப்பதிகம் முதலாகத் தானெனை முன்படைத்தான்’ என்னும் திருப் பதிகம் ஈறாக நூறு திருப்பதிகங்கள் உள்ளன. இப்பதிகங் களிலுள்ள திருப்பாடல்களின் தொகை 1025 ஆகும். நம்பி யாரூரகின் திருமணத்தின்போது நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சி யின்போது பாடிய பித்தாபிறைசூடி என்னும் திருப்பதிகம் முதலாவதாக வைக்கப்பெற்றுள்ளது! கயிலை நாதனின் ஆணைப்படி தேவர் முனிவர்களுடன் அஞ்சைக்களம் வந்த வெள்ளை யானையின்மீது அமர்ந்து நம்பியாரூரர் கயிலை சென்றார் என்பது வரலாறு. அப்பொழுது பாடிய திருப் பதிகம் 'தானெனை முன்படைத்தான்’ என்பதாகலின் அஃது இவ்வேழாந் திருமுறையின் இறுதியில் வைக்கப்பெற்றுள்ளது. நூறு திருப்பதிகங்கள் அடங்கிய இத்திருமுறையில் ‘தென்றமிழ்ப் பயனாய் வந்த திருத்தொண்டத் தொகை 39-ஆம் திருப்பதிகமாகவும், திருவைந்தெழுத்தின் சிறப்பினை புணர்த்தும் நமச்சிவாயத் திருப்பதிகம் 48-ஆம் பதிகமாக வும் அமைந்துள்ளன. சிந்தையின் தெளிவினைப் புலப் படுத்தும் ஆற்றல் வாய்ந்தது பஞ்சமம் என்ற பண்ணாதலின் சிந்தையில் தெளிவுடையோர் இப்பண்ணில் பரமனைப் பாடி மகிழ்வர். -